திட்டமிட்டபடி பீ.ஜே. வருவார் – SLTJ அறிவிப்பு

தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. ஜெய்னுப் ஆப்தீன் திட்டமிட்டபடி இலங்கை வருவார் SLTJ அறிவித்துள்ளது.
இதுபற்றி ஜமாத்தின் துணைச்செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறுகையில்,
பீ.ஜே. இலங்கை வருவதற்கான அத்தனை சட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவர் நிச்சயம் இலங்கை வருவார். குறிப்பிட்டபடி நிகழ்வுகளில் பங்கேற்பார். அதில் எத்தகைய மாற்றமும் கிடையாது.
கடந்த காலங்களில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. இப்போதும் அப்படித்தான். நாம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுபவர்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படுவோம்.
மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் எத்தகைய அச்சுறுத்தலக்ள் வந்தாலும் அவற்றுக்கு முகங்கொடுக்க தயார். அந்தவைகயில் பீ.ஜே. திட்டமிட்டபடி இலங்கை வருவார் என்பதை உறுதியாக அறிவிக்கிறோம் எனவும் ரஸ்மின் மௌலவி உறுதிபட கூறினார்.