Breaking
Fri. Dec 5th, 2025

பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அரசுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதாக எமது செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது செயற்பாடு சரியாக தெளியவில்லை.

இன்னும் முன்னைய அரசாங்கத்தின் பாணியில் தான் செயற்பட்டு வருவதாகத்தான் நான் நினைக்கிறேன் என்றார் அமைச்சர்

நாங்கள் ஆட்சியமைத்து 2 மாதங்கள்தான். எனவே அரசாங்கம் மீது குற்றம் சுமத்துவது தவறு. முன்னைய அரசாங்க ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தோடு தொடர்புபட்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post