Breaking
Fri. Dec 5th, 2025

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள்.

எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவன்ட் கார்ட் விவகாரத்தில் தவறில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post