மிதிபலகையில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

டிசம்பர் 01 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாகவும் புகையிரதம் பயணிக்கும் வேளைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.