Breaking
Fri. Dec 5th, 2025
யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக் குடியேறி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படும் முஸ்லிம் மக்களின் நிலைமையை இப்புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1990 ஆண்டு இப்பகுதியில் வசதியாக வாழ்ந்த அம்மக்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஆனால் இவ்வெளியேற்றத்தை முன்வைத்து சில தரப்பினர் வாதப்பிரதிவாதங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற ஏற்படுத்தி வருவதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.
ஏன் அம்மக்களை மீண்டும் மீளக்குடியேற்றம் செய்ய முடியாது.சில தரப்பினர் இதனை தங்களது இலாப நட்டங்களிற்காக இச்செயலை செய்வதை  பின்னிற்கின்றனர் என்பதே உண்மை.
அம்மக்கள் தெரிவித்த கருத்தின் படி எமக்கு சகல கால நிலைகளிற்கும் தாக்கு பிடிக்கக்கூடிய ஒரு உறைவிடத்தையாவது கட்டித் தந்தால் ஏனைய விடயங்களை தங்களது முயற்சியினால் செயற்படுத்தலாம் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
DSCF2194
DSCF2261

By

Related Post