வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கான தீர்வையற்ற வாகன அனுமதி பத்திர ரத்துவிடயத்துக்கு மாற்றுத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த தீர்வையற்ற வாகன அனுமதிக்காக நிதியை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான யோசனையை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியர்களுக்கு குறித்த அனுமதி பத்திரம் கிடைக்கும் போது பெரும்பாலானோர் அதனை சுமார் 1 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
எனவே அந்த ஒரு மில்லியன் நிதியை வைத்தியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் முன்வைத்தார்.
இதன்போது யோசனையை ரவி கருணாநாயக்கவும் ஏற்றுக்கொண்டார்.