சவூதி அரேபிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

சவூதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அங்கிருந்த பொறுப்பதிகாரியிடம் தேசிய சங்க சம்மேளனம் கையளித்துள்ளது.

அத்துடன், இந்த விடயம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

arpadam_saudi_emmpa_001

arpadam_saudi_emmpa_002

arpadam_saudi_emmpa_003

arpadam_saudi_emmpa_005