நிறைவேற்று அதிகாரங்களை மைத்திரிபால குறைப்பார்: அமெரிக்கா நம்பிக்கை

இலங்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சமந்தா பவார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த அதிகாரக் குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் சோதனைகளில் இருந்து மீண்டு சமநிலையை பேண ஜனாதிபதி மைத்திரிபால விரும்புவதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.