ரயிலில் மோதுண்டு கரடி பலி

முல்லைத்தீவு – பழைய முறிகண்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு கரடியொன்று பலியாகியுள்ளது,

இந்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளும் ரயிலுடன் மோதுண்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில், நேற்று இரவு இந்த கரடி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு வன விலங்குகள் தொடர்ந்தும் பலியாகி வருகின்றமை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கினறனர்.

அருகிவரும் கரடி இனத்தை சார்ந்த கரடி ஒன்றே இவ்வாறு பலியாகியுள்ளதாகவும் எமது செய்திளார் தெரிவித்தார்.

image-3e6bf38d603a8fdd137cf0f8d6591ce8b1553b224be87164f75e188e47631cb8-V

image-9e1941cb3a2b79d493b2ddd6802eccfb7a7312eb9369a48b1d1b6a48b93e9553-V

image-dd825c865928adb67740b530f4670b16553c5ed15b1b68d1727cb114f238f9d6-V