ஹிருணிகாவை குறித்து பொலிஸார் அறிவிக்கவில்லை: சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர்.

அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை.

பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள் என்ற நம்பிக்கையுண்டு என சபாநாயகர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா கைது செய்யப்படுவாரா அது குறித்து பொலிஸார் அறிவித்தனரா என சிங்களப் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது அது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பது ஒர் மரபாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.