நீரில் மூழ்கி இரு சிறுமிகள் பலி

வாழைச்சேனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி, இரு சிறுமிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தின் போது 13 மற்றும் 14 வயதான சிறுமிகளே உயிரிழந்துளள்னர்.

நேற்று (4) மாலை பூங்கா அருகில் இருந்த குளம் ஒன்றில் இறங்க முற்பட்டபோதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.