துமிந்த சில்வாவுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை எதிர்த்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன