Breaking
Fri. Dec 5th, 2025
மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நண்டு வளர்ப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நண்டுகளை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பார்வையிட்டார். மன்னார் மாவட்டத்தில் நண்டு வளர்ப்பினை ஊக்கப்படுத்த உதவிகள் எவையும் அற்ற நிலையில் தனியார் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த நண்டுகள் வளர்க்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச் செயலாளர் என் எம். முனவ்பர் உட்பட பலர் அங்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2

By

Related Post