சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஒத்திகை

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான முப்படையினரின் ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பின் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.