Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கை விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை (9) அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் இலங்கை கென்டரின் நிறுவனம் மற்றும் இலங்கை விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் நாளை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மோசடி தொடர்பில் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்னவிடம்  விசாரணை நடத்தப்பட்டதோடு , குறித்த குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post