Breaking
Fri. Dec 5th, 2025

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார்.
இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி பிற்பகல் வேளையில் மரணமானதாக வைத்தியாசாலை வட்டாரம் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post