Breaking
Fri. Dec 5th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு  தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வாரத்தில் பத்திரிகைகளின் ஊடாகவும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஊடாகவும் மீளவும் விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post