வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பிரதமர் அலுவலகத்தை நோக்கி பயணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த போதிலும், இன்று வரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் தற்போது 32000 வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

தாம் பல்வேறு வகையிலான போராட்டங்களை நடாத்தியிருந்த போதிலும், அதற்கான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.