யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட அஞ்சலா மெர்கல், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம் தொடர்பில் தான் மிகவும் தௌிவாக இருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் எதிர்கால பயணத்துக்கு முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.