Breaking
Fri. Dec 5th, 2025

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி கபுறடிச்சந்தியில் இன்று (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் முஸ்லிம் மதத்தலைவரான மௌலவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கல்முனை திசையை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கரவண்டியில் வந்த மௌவியை மோதியுள்ளது.

படுகாயமடைந்த மௌலவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

By

Related Post