கஞ்சா விற்றுவந்த இளைஞன் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்,ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து  4,080 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.