Breaking
Fri. Dec 5th, 2025
தகவல் அறியும்  சட்ட மூலம்  இந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அறியும் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த  சட்டமூலம்  பூர்த்தியாக்கப்பட்டு, மாகாணசபைகளிடம் கருத்து கோரப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,குறித்த சட்டமூலம்  அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், விவாதம் பற்றிய திகதிகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post