Breaking
Fri. Dec 5th, 2025
கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது இந்த மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என நீர்கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

By

Related Post