Breaking
Fri. Dec 5th, 2025
மகாவலி நிலையத்தின் புதிய பணிப்பாளராக அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் அவர் நேற்று (8) பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் விஸ்வா வர்ணபாலவின் மறைவையடுத்து வெற்றிடமாயிருந்த இப்பதவிக்கு அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மென்செஷ்டர் மெட்ரோ பொலிட்டன் பல்கலைகழகங்களில் பட்டப்பின்படிப்பு பட்டதாரியான லேகம்கே, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் சிலோன் எசெட் மெனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் த பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமை புரிந்துள்ளதுடன், இலங்கை செஞ்சலுவைச் சங்கத்திலும் முக்கியப் பதவியை வகித்துள்ளார்.

By

Related Post