Breaking
Fri. Dec 5th, 2025

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலு கூறப்பட்டுள்ளதாவது;

மறைந்த தேரர் இனங்களுக்குகிடையில் நல்லுறவை உருவாக்குவதில் பெரிதும் பாடுபட்டவர். பல்வேறு பட்ட கொள்கைகளையுடைய அரசியல்வாதிகள் இவரிடம் சென்று ஆசி பெறும்போது இன ஐக்கியத்தின் அவசியத்தை அவர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவதோடு நாட்டில் சமாதானம் நிலைக்க அனைவரும் பாடுபடவேண்டுமெனவும் அவர்களிடம் சுட்டிக்காட்டுவார்.

அதிகாரத்திலுள்ளவர்கள் தவறிழைக்கும் போதும் வெளிப்படையாக அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டும் நேர்மையானளராக அவர் செயற்பட்டார். அவரின் மறைவால் வருந்துகின்ற பௌத்தமக்களின் துயரங்களுடன் நாமும் பங்குகொள்கின்றோம்.

இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

By

Related Post