தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் –

சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.