தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இராணுவத்தினருக்கு மேலாக தாய் நாட்டை கௌரவத்துடன் பாதுகாக்க புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 70 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.