நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொஸ்கொட, துவேமோதரவில் பொது இடத்தில் இருவர்  மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். இதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களை கண்டித்துள்ளார்.

இதனையடுத்தே மதுபோதையில் இருந்த இருவரும் சேர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இதனால் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.