Breaking
Sun. Dec 7th, 2025

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் நாளை மறுதினம் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் மொத்தமாக 900 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது.

எதிர்கால மின்சார சவால்களை எதிர்கொள்ளவும் குறைந்த செலவில் மின் உற்பத்தி மேற்கொள்ளவும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

நுரைச்சோலை முதலாம், இரண்டாம் கட்டங்களினூடாக 600 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் நிலைய பணிகளுக்காக 1341 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

(TK)

Related Post