கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் வாசுதேவ பங்கேற்க மாட்டார்!

கூட்டு எதிர்க்கட்சியினால் கிருலப்பயில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பங்கேற்க மாட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது அதனை தந்திரமாக தவிர்க்க சில கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இவ்வாறு மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது தந்திரமாக அதனை தவிர்க்கத் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, வாசுதேவ நாணயக்கார ஏற்கனவே கியூபா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.