மொறட்டுவையில் விபத்து 24 பேர் படுகாயம்

மொறட்டுவ-கொரவெல்ல பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

சொகுசு பஸ், பாரவூர்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை, லுனுவில, பாணந்துறை வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.