Breaking
Fri. Dec 5th, 2025

இம்முறை நடைப்பெறவிருக்கும் மே தின ஊர்வலங்களுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இது தொடர்பில் தமக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணியில் கலந்து கொள்பவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றும் போக்குவரத்து வசதிகளின் நிமித்தம் பெறப்படும் பஸ் வண்டிகளுக்கான  கட்டணங்களை வழங்குமாறும் ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அரச நிறுவனங்களிலுள்ள வாகனங்களை இதற்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுகந்திரக்கட்சியின் மே தின பேரணியில் கலந்து கொள்ளுபவர்களுக்கு புதிய ஒருகமைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

By

Related Post