Breaking
Sun. Dec 7th, 2025

இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இலங்கைக்கும் இடையில் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளார்.இன்று இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கானமூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் கோலாகல வரவேற்பளிக்கப்படவுள்ளன.இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு ஜனாதிபதிகளின் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சீன ஜனாதிபதியின் வருகையையொட்டி அதிவேக பாதைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகம், மின்சாரம், கலாசாரம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளால் சீன ஜனாதிபதி விமான நிலையத்தில் வரவேற்கப்படுவார்.

Related Post