கண்டி உடதலவின்னவில் முஸ்லிம் கடைக்கு தீ வைப்பு

கண்டி உடதலவின்னவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைக்கும் வீதியில் நிறுத்தப்பட்டிருநத வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழன்(28) இடம்பெற்றுள்ளது
கண்டி உடதலவின்னை புகையிரத நிலைய பாதையை அண்மித்த வீதியிலேயே இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடை அறையை பெரும்பான்மையின சகோதரர் அண்மையில் வாடகைக்கு எடுத்திருந்தார். அந்தக் கடைக்கே தீ மூட்டப்பட்டுள்ளது.

இக்கடை அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் எரிந்துள்ளன.

அத்துடன் அந்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் லொறிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் உடதலவின்னை பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

a5.jpg2_5

a7