Breaking
Sun. Dec 7th, 2025
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த  84 வயதான அப்துல் சமது என்பவரின் வயிற்றில் முருகை கற்பாறை வடிவிலான கல்லொன்று சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
கிண்ணியா தள வைத்தியசாலையில் 16-09-2014 குறித்த வயோதிபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவரின் வயிற்றில் முன்னீர்க்கும் சுரப்பியிலிருந்த 60 கிராம் நிறையுடைய கல்லே அகற்றப்பட்டுள்ளது.
அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ரொஹான் குமாரவினால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட “கல்” முருகை கற்பாறை வடிவில் இருப்பதாக வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Related Post