Breaking
Sun. Dec 7th, 2025

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும்.

அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பெய்யாமல் மிக கடும் வறட்சி ஏற்படும். குறிப்பாக அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி, இந்தியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

இதே கருத்தை அரிசோனா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானி ஜோனாதன் டி ஓவர்பெக் தெரிவித்துள்ளார். இது போன்ற கடும் வறட்சி கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக உலகில் மாறி மாறி வருகிறது. அதுவே மக்களின் குடியேற்றம் வாழ்வாதாரத்தில் குழப்ப நிலைக்கு காரணமாக அமைகிறது.

(MM)

Related Post