காலிக்கு வந்ததில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றனர்

காலியில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களுக்கு வந்தவர்களில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றிருந்ததாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர், எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (3)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இம்முறை தமக்கு ஒரு சவால் இருந்ததாக குறிப்பிட்ட அவர், கிருளப்பனையில் மேதினம் ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு சவாலாகவே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் பொருளாளர் என்ற ரீதியில் 2100 பஸ்களுக்கு கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால் காலிக்கு 3000க்கும் அதிகமான பஸ்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சிலருக்கு காலிக்கு நுழைய முடியாது போனது எனவும் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.