Breaking
Fri. Dec 5th, 2025

மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களின் முரட்டுத்தனமான செயற்பாடுகள் காரணமாகவே நேற்றைய (3) நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாநாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அதனை அவர்களால் பொறுத்துக் கொண்டிருக்கமுடியவில்லை.

இதன் காரணமாகவே அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதனை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்சந்தித் சமரசிங்க காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கழுத்தில் முறிவேற்பட்டதுடன், முகம் மற்றும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இது மகிந்த ஆதரவாளர்களின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

By

Related Post