Breaking
Fri. Dec 5th, 2025

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post