கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய தின நிகழ்வு

– பரீட் இஸ்பான் –

2016ம் ஆண்டிக்கான இஸ்லாமிய தின நிகழ்வு 2016.05.07 – 2016.05.08 ஆகிய தினங்களில் கொழும்பு பல்கலைக்கழக மஜ்லிசின் ஏற்பாட்டில் சட்ட பீட வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பில் உள்ள 25 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் பங்குபற்றின. இங்கு பேச்சசுப் போட்டி அதான் கூறல் விவாதப்போட்டி ஹஸீதா மற்றும் வினாவிடைப்போட்டி என்பன நிகழ்வை அலங்கரித்தன.

அத்தோடு சில போட்டிகள் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியமை குறிபிடத்தக்க விடயமாகும்.