Breaking
Fri. Dec 5th, 2025
மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று -10- இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர், பிரித்தானியப் பிரதமரிடம் கோரவுள்ளார்.
பிரித்தானியப் பயணத்தை முடித்துக் கொண்டு, மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வரும் 13ஆம் நாள் இந்தியத் தலைநகர் புதுடெல்லி செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post