Breaking
Fri. Dec 5th, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியவன்னா வாவியின் நீர்மட்டம் தற்போதைக்கு 1.8 மீட்டரை அண்மித்துள்ளது.

இன்னும் ஓரிரு அடிகள் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினுள் முற்றாக வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற மைதானம் அதனை அண்மித்த பாதைகள் அனைத்தும் தற்போது வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post