சீரற்ற காலநிலை! கடுவலை அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்

கடுவலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் நுழைவு பகுதி வெளியேறும் பகுதிகளில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 10 மாத குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளன.

பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.