Breaking
Fri. Dec 5th, 2025

கல்வி அமைச்சின் அனுசரணையில் கண்டி குருதெனியவில் ஆசிரியர்களுக்கான வதிவிட செயலமர்வு ஒன்று நடத்தப்படுகிறது.

நாளையும் நாளை மறுதினமும் இந்த செயலமர்வு குருதெனியவில் உள்ள கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.

இதில், நுவரெலிய, கம்பளை, கொத்மலை மற்றும் ஹட்டன் வலயத்தின் தெரிவு செய்யப்பட்ட 40 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தோழில் வழிகாட்டல் என்ற தொனிப்பொருளில் இந்த செயலமர்வு இடம்பெறுவதாக குருதெனிய வள நிலைய உதவி முகாமையாளர் எம் தங்கராஜ் அறிவித்துள்ளார்.

By

Related Post