Breaking
Sun. May 5th, 2024

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையில் 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு, காலி முகத்திடலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தான் அணிந்து சென்ற பாதணிகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வீட்டிலிருந்த பாதணிகளில் இரண்டை அணிந்து சென்றேன். அந்த பாதணிகளில் ‘அடிகள்’ இரண்டுமே இடைநடுவில் கழன்றுவிட்டன.

அந்த பாதணிகள் இரண்டுமே வெள்ளைநிறமானவை. நான் உடுத்தியிருந்த உடைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதனால் அதனை அணிந்துசென்றேன். ஆனாலும் நீண்ட நாட்களாக அந்த பாதணிகளை அணியவில்லை.

பழைய பாதணிகள் என்பதனால் இடைநடுவில் அடிகள் கழன்றுவிட்டன. என்ன செய்வது. விழாவுக்கு செல்லவேண்டும். சீன ஜனாதிபதியுடன் கைலாகு கொடுப்பது எப்போதாவது ஒரு தடவை கிடைக்கின்ற சந்தர்ப்பமாகும். அதனால், நான் அடிகள் கழன்றதோடு சென்றுவிட்டேன்.

நாங்கள் கிராமத்து மக்கள், மண்ணில் பாதங்களை பதித்து நின்கின்ற மனிதர்கள். பாதணிகள் இரண்டுக்கும் நடந்ததை பற்றி நான் நினைக்கவில்லை. எனினும், படங்கள் வெளியாகியிருந்தன. எதுவும் நடக்கலாம். (TM)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *