Breaking
Sun. Dec 7th, 2025

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியை விற்கின்றமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து நேற்று கொழும்பில் பல் கலைக்கழக மாணவர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தாமரைத்தடாக சுற்றுவட்டத்துக்கு அருகாமையிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தை மாணவர்கள் முன்னெ டுத்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக பல கோ­ங்களை எழுப்பியிருந்தனர். அரசால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை விற்பனை செய்வதற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாள்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், மஹாபொல புலமைப்பரிசில் தொகையை 5,000 ரூபாவாக உயர்த்தவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் விடுதி பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோ­ம் எழுப்பினர்.

இவர்கள் மாலபையில் அமைந்துள்ள வைத்தியக் கல்லூரிக்குத் தமது எதிர்ப்பை பலமாகத் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post