அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஒரு சிலர் சுற்றுலாக்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் நபர்களினால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அரநாயக்க பகுதிக்கு பலர் வெறுமனே ஒர் சுற்றலா செல்வதனைப் போன்று சென்று வருவதாகவும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நிவாரணங்களை வழங்குவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

