Breaking
Sun. Dec 7th, 2025

யாழ்ப்பாணத்திற்கான சேவையினை முழுமையாக வழங்கும் வகையில் யாழ்தேவியின் பரீட்சார்த்த ஓட்டம் இன்றும் தொடர்ந்தது.பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை இன்று பகல் 11 மணியளவில் வந்தடைந்தது. இன்றைய வெள்ளோட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலர் இளங்கோவன் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இன்றும் ரயிலைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ரயிலைக் கண்டதும் கைதட்டி ஆரவாரித்து வரவேற்றதுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.இதேவேளை, நேற்று முன்தினம் முதல் வெள்ளோட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எனினும் எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Post