Breaking
Sun. Dec 7th, 2025
ஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில் ஈரானின் உதவியைப் பெறுவதற்காக, அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்துவது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஜெருசலேமில் திங்கள்கிழமை கூறுகையில், “”தங்கள் சுய நலனுக்காகத்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்பதில் ஐ.எஸ். அமைப்புக்கும், ஈரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது” என்றார்.

Related Post