நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டில் ஏற்படும் சிறிய சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சாலாவை முகாம் வெடிப்பை மையப்படுத்தி அரசியல் லாபம் தேட பலர் முனைவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு இடர் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் 8000 டொன் ஆயுதங்கள் அழிவடைந்துள்ளதோடு, 75 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அதில் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் 300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்திருப்பதானது பொய்யான தகவல் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.